Pages

Monday, September 22, 2008

PHOTOS 2008 OOTY,MUDUMALAI,AVALANCHE,UPPER BHAVANI

Sunday, September 21, 2008

PHOTOS 2008 OOTY,MUDUMALAI ,AVALANCHE & UPPER BHAVANI

Thursday, September 11, 2008

2008 OOTY TOUR (25-08-2008 TO 31-08-2008) MUDUMALAI,AVALANCHE & UPPER BHAVANI FOREST AREAS

இந்நாட்களில், தொழிற்சாலையில் பணிபுரிவது என்றாலும், மற்ற பிற பணியிடங்களில் பணிபுரிவது என்றாலும் மற்றும் வீட்டில் வீட்டுவேலைகளை கவனிப்பது என்றாலும் மன அழுத்தத்துடன் தான் பணியில் ஈடுபட முடிகிறது.

இந்த மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு உள்ளத்திற்கு புத்துணர்ச்சியையும் மற்றும் மகிழ்ச்சியையும் வருடத்திற்கு ஒரு முறையாவது ஏற்படுத்திகொள்வது அவசியம்.

புத்துணர்ச்சி பெற இந்த வருடம் 2008 ஆகஸ்ட் 26 முதல் 30 வரை மேற்கு தொடர்ச்சி மலையில் ஊட்டி அருகில் அமைந்துள்ள முதுமலை, அவலாஞ்சி, அப்பர் பவானி மற்றும் வெஸ்டர்ன் கேட்ச்மென்ட் வனப்பகுதிகளுக்கு செல்வதென நண்பர்கள் (நான், சுகுமார், பாலகிருஷ்ணன் மற்றும் குமாரவேல்) முடிவு செய்தோம். முன்பே ஒருமுறை நானும் சுகுமாரும் அவ்விடங்களுக்கு சென்று வந்திருந்த போதிலும் அவ்விடத்தைப்பற்றி நன்கறிந்த ஒருவருடன் சென்று அவ்விடத்தின் இயற்கை எழிலையும் வனத்தின் வனப்பையும் மற்றும் இயைற்கை சூழலில் விலங்குகளின் நடமாட்டத்தையும் கண்டு மகிழ விரும்பினோம்.

இணையத்தில்(INTERNET)தேடியபொழுது டிரைவர் ஜெகதீசனைப் பற்றி தெரிந்து கொள்ளமுடிந்தது. திரு.ஜெகதீசன் அவர்கள் கோவையைச் சேர்ந்த இனிய நண்பர். அவர் சொந்த ட்ராவல்ஸ் வைத்து நடத்துகிறார் என்றும் அவருக்கு நீலகிரி மாவட்டத்திலுள்ள எல்லா வனப்பகுதிகளும் நல்ல பழக்கம் என்றும் மேலும் அவரின் சகோதரர் திரு.ரமேஷ் அவர்கள் அவலாஞ்சி மின் உற்பத்தி நிலையத்தில் லைன் இன்ஸ்பெக்டர் ஆக பணியாற்றுவதால் அவலாஞ்சி, அப்பர் பவானி மற்றும் வெஸ்டர்ன் கேட்ச்மென்ட் வனப்பகுதிகளுக்கு சென்று வருவது எளிதென்றும் தெரிந்து கொண்டோம். அவரின் செல்போன் நம்பர் 919442370007 என்றும் கொடுக்கப்பட்டிருந்தது. உடனே அவரின் செல்லுக்கு தொடர்பு கொண்டு பேசியபோது அவரின் பதில் நம்பிக்கை அளிப்பதாகவும் மற்றும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் இருந்தது. நண்பர்கள் (நான் , சுகுமார் , பாலகிருஷ்ணன் மற்றும் குமாரவேல் ) கலந்து பேசி பயணத் திட்டம் தயாரித்தோம்.

அதன்படி சென்னையிலிருந்து 25-08-2008
இரவு நீலகிரி விரைவுவண்டியில் (EXPRESS) பயணம் புறப்படுவது என்றும் 26-08-2008 விடியற்காலை 5.00 மணிக்கு கோவை இரயில் நிலையத்துக்கு ஜெகதீசனை காருடன் வந்துவிட சொல்வதென்றும் அங்கிருந்து காரிலேயே ஊட்டி மற்றும் வனப்பகுதிகளை சுற்றிப் பார்த்து விட்டு கோவையிலிருந்து 30-08-2008 இரவு நீலகிரி விரைவுவண்டியில் (EXPRESS) சென்னைக்கு திரும்புவது என்றும் முடிவானது.

எங்களுடன் பணிபுரியும் திரு.லக்ஷ்மி நரசிம்மன் அவர்களின் மைத்துனர் திரு.நேருஜி FOREST RANGER OFFICER-ஆக சென்னை அருகிலுள்ள திருவள்ளூரில் பணியில் உள்ளார். அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஊட்டி அருகிலுள்ள காடுகளுக்கு சுற்று பயணம் செய்யும் விவரத்தை சொல்லி ஒரு அறிமுக கடிதம் மற்றும் முதுமலை மற்றும் அவலாஞ்சி FOREST GUEST HOUSE -ல் தங்குவதற்கு உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டோம். அவரின் மூலமாக 27-08-2008 அன்று முதுமலை FOREST GUEST HOUSE -ல் தங்குவதற்கு அனுமதி கிடைத்தது. ஆனால் அவலாஞ்சியில் தங்குவதற்கு அனுமதி கிடைக்கவில்லை.

முதுமலை FOREST GUEST HOUSE -ல் தங்குவதற்கு Field Director, Mudumalai and Mukurthi National Parks, Mount Stewart hill, Ooty - 643001 என்ற முகவரிக்கு கடிதம் அனுப்பி தங்குவதற்கு அனுமதி பெற வேண்டும். அவலாஞ்சி FOREST GUEST HOUSE -ல் தங்குவதற்கு District Forest Officer (South) ,Mount Stewart hill, Ooty - 643001 என்ற முகவரிக்கு கடிதம் அனுப்பி தங்குவதற்கு அனுமதி பெற வேண்டும். இவ்விடங்களில் FOREST GUEST HOUSE -ல் தங்கி சுற்றி பார்க்க விரும்புபவர்கள் மேற்குறிப்பிட்ட முகவரிகளுக்கு சுமார் 15 நாட்களுக்கு முன்னதாகவே அனுமதி வேண்டி கடிதம் அனுப்பவும். ஊட்டிக்கு ஒருநாள் முன்னதாக சென்று சம்பந்தப்பட்ட அலுவலங்களில் அனுமதி கடிதம் பெற்றுக்கொள்ளவும். இவ்விரண்டு அலுவலகங்களும் அருகருகே ஊட்டி சாரிங்க் கிராஸ் பகுதியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக ஹோட்டலுக்கு பின்புறம் உள்ளன. ஊட்டி வன தெற்கு, வடக்கு மற்றும் வன பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலங்களும் இவ்விடத்திலேயே அமைந்துள்ளதால் எல்லா அனுமதி கடிதங்களையும் இங்கேயே பெற்றுக்கொள்ளலாம். முதுமலைக்கு சுற்றிப்பார்க்க மட்டுமென்றால் அனுமதி கடிதம் தேவையில்லை. ஆனால் அவலாஞ்சிக்கு சுற்றி பார்க்க கூட அனுமதி கடிதம் தேவை.

மலை காடுகளுக்கு சுற்று பயணம் செல்லுபவர்கள் முக்கிய கவனத்திற்கு : மெழுகுவத்தி, கொசுவத்திசுருள், தீப்பெட்டி, டார்ச் லைட், கம்பளி, முக்கிய மருந்துகள், பாதுகாப்பு காலணிகள் மற்றும் தேவையான அளவு தின்பண்டங்கள் எடுத்துச் செல்லவும். காடுகளுக்குள் செல்லும்போது வெள்ளை நிற ஆடைகள் அணியாமல், பச்சை மற்றும் பழுப்பு நிற ஆடைகளை அணியவும். வெள்ளை நிற வாகனங்களை தவிர்த்து பச்சை நிற வாகனங்களில் செல்வது நல்லது. மிருகங்களுக்கு குறிப்பாக யானைகளுக்கு வெள்ளை நிறம் என்றாலே பிடிக்காது.

திட்டப்படி சென்னையிலிருந்து 25-08-2008 இரவு நீலகிரி விரைவுவண்டியில் (EXPRESS) கிளம்பினோம் 26-08-2008 விடியற்காலை 5.00 மணிக்கு கோவை இரயில் நிலையத்தில் ஜெகதீசன் காருடன் காத்திருந்தார். ஊட்டிக்கு மலை இரயிலில் செல்லலாம் என முடிவு செய்து காரில் மேட்டுபாளையம் இரயில் நிலையத்தில் நாங்கள் இறங்கிகொண்டோம் ஜெகதீசனை ஊட்டி இரயில் நிலையத்தில் வந்து எங்களை அழைத்து செல்லுமாறு கேட்டுகொண்டோம்.

26-08-2008
மேட்டுபாளையம் - ஊட்டி இடையே கல்லார், ஹில்குரோவ், ரன்னிமேடு, குன்னூர், வெலிங்க்டன், அரவங்காடு, கேத்தி மற்றும் லவ்டேல் இரயில் நிலையங்கள் உள்ளன. காலை 7.15 மணிக்கு மேட்டுபாளையம் இரயில் நிலையத்திலிருந்து கிளம்பும் மலைரயில் மதியம் சுமார் 12.00 மணிக்கு ஊட்டியை அடைந்தது. இந்த பயணம் எங்களுக்கு மிகவும் உற்சாகத்தை தந்தது. மேற்கு தொடர்ச்சி மலையின் எழிலை மிகவும் ரசித்தோம். இந்த மலை ரயில் மிகவும் மெதுவாக செல்வதால் முழு அழகையும் ரசிக்க முடிகிறது. ஊட்டி ரயில் நிலையத்தை ரயில் 12:00 மணிக்கு அடைந்தபோது திரு.ஜெகதீசன் அவர்கள் எங்களுக்காக காத்திருந்தார். இன்டர்நெட் மூலமாக முன்பே தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக ஹோட்டலில் இரண்டு ரூம்கள் அட்வான்ஸ் புக்கிங் செய்யபட்டிருந்ததால் நேரே ஹோட்டலுக்கு சென்று விட்டோம்.

திரு.ஜெகதீசனையும் எங்களுடன் ரூமில் தான் தங்க வேண்டும் என்று சொல்லி எங்களுடனேயே தங்கவைத்து கொண்டோம். மதிய சாப்பாட்டை ஊட்டி காபி ஹௌஸ் ஹோட்டலில் முடித்துக்கொண்டு FOREST OFFICE -க்கு அவலாஞ்சி விசிட்டுக்கு PERMISSION வேண்டி கடிதம் கொடுக்க சென்றோம். DFO மர்ற்றலாகி புதிய DFO இப்போதுதான் சார்ஜ் எடுத்திருப்பதால் மறுநாள் காலை வந்து பார்க்கும்படி கூறிவிட்டார்கள். மேலும் அங்கு அவர்களிடம் வீண் விவாதத்தில் நேரத்தை வீணடிக்க விருப்பமில்லாமல் தொட்டபெட்டா சிகரத்திற்கு சென்றோம். தொட்டபெட்டா செல்லும் வழிலேயே மழை பெய்ய தொடங்கிவிட்டது. நல்ல மழையிலே தொட்டபெட்டாவை ரசித்தோம். வரும் வழியில் டி பாக்டரி மியுசியத்தில் டி இலைகள் மெசினில் ப்ராசெஸ் செய்யப்பட்டு டி துகளாக வெளிவருவதை பார்த்தோம்.

காலை 9.00 மணியளவில் TTDC HOTEL ROOM-யை காலி செய்து விட்டு நேராக OOTY BOTANICAL GARDEN-க்கு சென்றோம். பின்பு TIFFIN முடித்து விட்டு ROSE GARDEN-க்கு சென்றோம். மறுபடியும் FOREST OFFICE-க்கு அவலாஞ்சிக்கு அனுமதி கடிதம் வேண்டி சென்றோம். கடிதத்தில் இன்னும் DFO அவர்கள் கையெழுத்திடவில்லை என்ற பதில்தான் கிடைத்தது. மேலும் மறு நாள் வந்து பார்க்கும்படி பதிலளித்தனர். இனிமேல் அவலாஞ்சிக்கு அனுமதி கடிதம் கிடைக்காது என்பது புரிந்ததால் மேற்கொண்டு அங்கு நேரத்தை வீணடிக்காமல் உடனே முதுமலைக்கு கிளம்பினோம். முதுமலைக்கு ஊட்டியிலிருந்து இரண்டு வழிகள் உள்ளன. முதல் வழி ஊட்டியிலிருந்து பைக்காரா, கூடலூர், முதுமலை மற்றும் பந்திபூர் வழியாக மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை மற்றது ஊட்டியிலிருந்து மசினகுடி, முதுமலை வழியாக மைசூர் செல்வது. பைக்காரா விழியில் முதுமலை சுமார் 67 கிலோமீட்டர் தொலைவிலும் மசினகுடி வழியாக சுமார் 35 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. மசினகுடி வழி அகலம் குறைந்த மலைப்பாதை அதில் பல அபாயகரமான HAIRPIN BENDS உள்ளன ஆகவே அது ஒருவழி பாதையாக்கப்பட்டு முதுமலை-ஊட்டி ஒருவழி போக்குவரத்து மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. ஊட்டி-பைக்காரா-முதுமலை வழியில் இயற்கை காட்சிகள் நிறைந்த பல இடங்கள் உள்ளன. முதலில் வருவது பைன் பாரஸ்ட் எனப்படும் பைன் மரங்கள் நிறைந்த பகுதி மிகவும் அழகான பகுதி. காமராஜ சாகர் என்றழைக்கப்படும் ஊட்டிக்கு குடிநீர் வழங்கும் அணைக்கட்டில் பல திரைப்படங்களின் காதல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இது மிக அழகான பசும் புல்வெளிகள் , பள்ளத்தாக்குகள், மேடுகள் ஓடைகள் நிறைந்த இடம். ஷூட்டிங் மேடு எனப்படும் இடம் பெயருக்கு ஏற்றாற்போல் நிறைய ஷூட்டிங்குகள் வருடம் முழுவதும் நடைபெறுகின்ற இடம். இதுவும் மிகவும் அழகான பசும் புல்வெளிகள், பள்ளத்தாக்குகள், மேடுகள் ஓடைகள் நிறைந்த இடம். இவ்விடத்திலும் நிறைய காதல்காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இதையெல்லாம் பார்த்துவிட்டு பைக்காரா ஏரியை படகில் ஒரு சுற்று சுற்றினோம். பைக்காரா ஏரியில் தண்ணீர் மிக குறைந்த அளவே உள்ளது. கூடலூர் தாண்டியதும் சாலையின் இருபுறமும் நிறைய மூங்கில் காடுகள் உள்ளன. யானைகளின் முக்கிய உணவான மூங்கில்கள் இயற்கையாகவே வளர்ந்துள்ளன. மதியம் சுமார் 3 மணிக்கு முதுமலை வந்து சேர்ந்தோம். SYLVAN LODGE-ல் எங்களுக்கு இரண்டு காட்டேஜ்கள் ஒதுக்கியிருந்தனர். MOYAR ஆற்றின் கரையில் மிகவும் அமைதியான இடத்தில் காட்டேஜ்கள் இருந்தது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்தது. முதுமலை வனவிலங்கு சரணலாயத்தின் உள்ளே சுமார் 5 கிலோமீட்டர் தூரம் அவர்களால் நடத்தப்படும் VAN SAFARI-யில் சென்றோம். ஐந்தாறு மான்கள் தவிர வேறு மிருகங்கள் எதையும் நாங்கள் SAFARI-யில் பார்க்கவில்லை. பின்பு THEPPAKADU யானைகள் முகாமுக்கு சென்று யானைகளுக்கு உணவளிப்பதை கண்டு களித்தோம். திரு.ஜெகதீசன் அவர்கள் முதுமலையிலிருந்து பந்திபூர் வரை இந்த அந்தி(மாலை) நேரம் காரில் சென்றாள் நிறைய மிருகங்களை காணலாம் என்றதால் உடனே கிளம்பினோம். போகும் வழியிலும் பின்பு திரும்பும்போதும் நிறைய காட்டெருமைகளை கண்டோம். பின்பு முதுமலை திரும்பி மசினகுடி வரை மிருகங்களை தேடி சென்றோம். உணவுண்ட பின்பு அங்கே வேலை செய்யும் மாறனையும் அழைத்துக்கொண்டு கூடலூர் வழியில் சென்றோம். சுமார் 5 KILOMETER தூரம் கூடலூர் வழியில் சென்று திரும்பும் பொழுது ஐந்தாறு யானைகள் (ELEHPANTS) சாலையோரம் மரங்களின் கிளைகளை ஒடித்து தின்று பசியாருவதைக் கண்டோம். மெதுவாக அவ்விடத்தை கடந்து வரும்பொழுது ஒரு திருப்பத்தில் பெரிய யானையொன்று ரோட்டை மறித்து நிற்பதை பார்த்து ஜெகதீசன் காரை நிறுத்திவிட்டார். எதிரில் வந்த வாகனங்களும் சிறிது தூரத்திலேயே நிறுத்திவிட்டனர். ஓரமாய் நின்றிருந்த யானை நகர ஆரம்பித்ததும் ஜெகதீசன் காரின் ஹெட்லைட்டை அணைத்துவிட்டார்.எதிரிலிருந்த வாகனங்களில் இருந்தவர்களும் ஹெட்லைட்டை அணைத்துவிட்டு அமைதியாய் காத்திருந்தனர். யானை ரோட்டைவிட்டு காட்டுக்குள் நகர்ந்ததும் முதல் வேலையாக காரில் வேகமாக அந்த இடத்தை கடந்துவிட்டோம். பொதுவாக யானைகள் கூட்டமாய் இருக்கும்போது மனிதர்களை தாக்குவதில்லை என்றும் ஒற்றை யானையே மனிதர்களை தாக்குகின்றன என்றும் ஜெகதீசன் கூறினார். இரவில் காரில் போகும்போது யானைகள் வழிமறித்தால் காரின் இன்ஜினை அணைத்துவிட்டு ஹெட்லைட்டை போட்டுவிட்டு காரிலேயே அமைதியாக இருக்கவேண்டுமென்றும் யானை காரை நோக்கி நகர்ந்தால் ஹெட்லைட்டையும் அணைத்துவிடவேண்டும் என்றும் யானை அவ்விடத்தை விட்டு நகரும்வரை அப்படியே இருக்கவேண்டும் என்றும் கூறினார். காட்டேஜெக்கு அருகில் மேலும் சில யானைகள் இருந்ததைப் பார்த்தோம். முகாமில் வளர்க்கப்படும் யானைகளைக் காட்டிலும் இந்த காட்டு யானைகள் கம்பீரமாகவும் செழிப்பாகவும் முரடாகவும் இருந்தன.

மறுநாள் காலையில் டிபனை முடித்துவிட்டு முதுமலையிலிருந்து கிளம்பினோம். மசினகுடி வழியாக செல்லும்போது வழியிலுள்ள இயற்கை காட்சிகளையெல்லாம் ரசித்துக்கொண்டே சென்றோம். சுமார் 12.00 மணிக்கு ஊட்டியை அடைந்தோம். AVALANCHEE FOREST GUEST HOUSE-யில் தங்க அனுமதி கிடைக்காததால் AVALANCHEE E.B.-யில் வேலை பார்க்கும் ஜெகதீசனின் சகோதரர் திரு.ரமேஷ் அவர்கள் குடும்பத்துடன் தங்கியிருக்கும் E.B.QUARTER அருகில் காலியாயிருக்கும் இன்னொரு E.B.QUARTER-யை சேர்ந்த வீட்டில் எங்களை தங்கவைப்பது என்று திரு.ஜெகதீசன் எங்களிடம் சொல்லியிருந்தார். எங்களுக்கு சாப்பாடு சகோதரர் திரு.ரமேஷ் வீட்டில் ஏற்பாடு செய்வதாகவும் சொல்லியிருந்தார். இதனிடையே திரு.ரமேஷின் நெருங்கிய உறவினர் ஒருவர் கடும் விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் கோயம்புத்தூர் ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடிகொண்டிரிந்தார். அதனால் திரு.ரமேஷ் குடும்பத்தை கோயம்புத்தூர் அனுப்பிவிட்டு அவர்மட்டும் COIMBATORE-க்கும் AVALANCHEE-க்கும் போய்வந்து கொண்டிருந்தார். அன்றிரவு எப்படியும் AVALANCHEE-க்கு வந்துவிடுவதாகவும் கூறியிருந்தார். ஊட்டியில் சமையலுக்கு வேண்டிய கோழி மற்றும் சில சாமான்களை வாங்கிகொண்டு அவலாஞ்சிக்கு நாங்கள் காரில் கிளம்பினோம். ஊட்டியிலிருந்து அவலாஞ்சி சுமார் 20 K.M. தொலைவில் உள்ளது. போகும் வழியில் எம்ரால்ட் ஏரியும் அணைகட்டும் உள்ளன. மிகசிறந்த இடம். மனதை கொள்ளை கொள்ளும் இயற்கை காட்சிகள் நிறைந்த இடம். அணைக்கட்டுக்கு எம்ரால்ட் கிராமத்திலிருந்து பிரிந்து செல்லவேண்டும். நேரே போகும் வழி அவலாஞ்சிக்கு செல்லும் வழியாகும். அணைக்கட்டு அருகில் ஒரு ஹிந்தி பட ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. ஏரிக்கு மேலே செட் அமைத்து பட ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. இவ்விடத்தில்தான் மிகவும் புகழ் பெற்ற பழமையான பிரிட்டிஷ் காலத்து பங்களாவில் "REDHILLS RESORTS" அமைந்துள்ளது. இவற்றையெல்லாம் பார்த்து ரசித்துக்கொண்டே அவலாஞ்சியை அடைந்தோம். அவலாஞ்சி பாரஸ்ட் செக் போஸ்டில் இருந்த பாரஸ்ட் GUARD ஜெகதீசனை சில கேள்விகள் கேட்டார். ஜெகதீசன் ரமேஷ் வீட்டிற்கு செல்வதாக சொன்னார். பின்பு முன்பே வாங்கியிருந்த பீர் பாட்டிலை அவரிடம் கொடுத்தார். பீர் பாட்டிலை கண்டதும் அவருக்கு மிகவும் சந்தோசமாகிவிட்டது. உடனே பாரஸ்ட் செக் போஸ்ட் கேட்டை திறந்து எங்களை போகச்சொன்னார். அவலாஞ்சி செல்லும் வழியும் மோசம் அவலாஞ்சிக்குள்ளும் ரோடுகள் மிகவும் மோசம். சில இடங்களில் ரோடுகளே இல்லை. அவலாஞ்சி காட்டின் எல்லையிலிருந்து ரோட்டின் பல இடங்களில் மழைத்தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஒரு திருப்பத்தில் திரும்பியதும் அவலாஞ்சி E.B.POWER STATION QUARTERS தெரிந்தது. ஒருநாளைக்கு இருமுறை மட்டும் அரசாங்க பஸ்கள் இங்கு வந்து செல்கின்றன. TAMILNADU ELECTRICITY BOARD(TNEB) முடிந்தவரை வசதிகள் செய்து கொடுத்திருந்தாலும் இவ்விடத்தில் இருப்பதென்பது மிகமிக கடினமானதாகும். எப்பொழுதும் குளிரும் மற்றும் மழையும் இவ்விடத்தில் பொழிகிறது. திரு.ரமேஷ் அவர்கள் வீட்டிற்கு சென்றோம் அங்கு சென்றதும் ஜெகதீசன் எங்களுக்காக உணவு தயாரிக்கும் பொறுப்பையும் மேற்கொண்டார். சுமார் 6 மணிக்கு ரமேஷ் வந்துசேர்ந்தார். இரவு சாப்பாட்டிற்கு QUARTERS-ல் உள்ள மெஸ்ஸில் டிபனுக்கு சொல்லியிருந்தோம். மெஸ்ஸில் வழக்கமாக சமைப்பவர் அவரின் உறவினர் ஒருவரின் ஈமச்சடங்குக்காக சொந்தவூர் சென்றுவிட்டபடியால் ஓரளவு சமையல் தெரிந்த DME படித்து தற்போது TRAINEE-யாக பணிபுரியும் திரு.லாரென்ஸ் எங்களுக்கு தோசைகள் சுட்டுத்தந்தர். அங்கே அவர்களுக்குள் உள்ள CO-OPERATION வியக்கவைக்கிறது. திரு.ரமேஷின் வீட்டில் எல்லா இடங்களிலும் HEATER வைத்திருக்கிறார். ஆனால் எல்லாமே அபாயகரமாய் சரியான ஒயரிங் இல்லாமல் தொங்கிகொண்டிருக்கின்றன. பாத்ரூமில் பெரிய டிரம்மில் உள்ள தண்ணீரை IMMERSIBLE HEATER HEAT செய்துகொண்டேயிருக்கிறது. மிகவும் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் ஷாக் அடிப்பது நிச்சயம்.

மறுநாள் காலையில் சுமார் 7.00 மணிக்கு UPPER BHAVANI அணைக்கட்டுக்கு போகும் வழியில் உள்ள பவானி அம்மன் கோயிலுக்குச் சென்றோம். இந்த கோயில் அப்பர் பவானி அணைக்கட்டு கட்டபடுவதற்கு முன் அணைகட்டும் வேலை எந்தவிதமான தடங்களும் இல்லாமல் முடியவேண்டும் என்பதற்காக கட்டப்பட்டதாகும். இது லக்கிடி மற்றும் அவலாஞ்சி POWER STATION VALVE HOUSE-க்கு போகும் வழியிலுள்ளது. ஜெகதீசனும் மற்றும் சுகுமாரும் இந்த அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பின்பு POWER STAION VALVE HOUSE-க்கு சென்றோம். அப்பர் பவானி அணைகட்டிலிருந்து வரும் தண்ணீர் இந்த VALVE HOUSE வழியாக குறிப்பிட்ட அளவில் அவலாஞ்சி POWER STATION-க்கு POWER GENERATION-க்காக திருப்பிவிடப்படுகிறது. இந்த இடத்தின் அழகு மனதை மிகவும் கொள்ளைகொள்கிறது. மதியஉணவு சாப்பிட்டுவிட்டு சுமார் 2 மணிக்கு அப்பர் பவானி அணைக்கட்டுக்கு திரு.ரமேஷ் அவர்களையும் அழைத்துக்கொண்டு சென்றோம். அவலாஞ்சியிலிருந்து அப்பர் பவானி போகும் வழியில் நிறைய மரங்கள் முறிந்து கிடந்தன. கோபம்கொண்ட யானையொன்று இவ்வழியே போயிருக்கிறது என்று ரமேஷ் கூறினர். வழியில் நாங்கள் யானைகளை பார்க்கவில்லையே தவிர நிறைய காட்டு எருமைகளைப் பார்த்தோம். நிறைய மான்களை பார்த்தோம். நிறைய இடங்களில் வண்டியை நிறுத்தி VIEW பாயிண்ட் காண்பித்துக்கொண்டே வந்தார் ஜெகதீசன். சுமார் 4 மணிக்கு அப்பர் பவானி அணைக்கட்டு பகுதிக்கு வந்து சேர்ந்தோம். அணையில் தண்ணீர் அதிகமில்லை. தண்ணீரை பம்ப் செய்து அவலாஞ்சி பகுதிக்கு அனுப்பிக்கொண்டிருந்தனர். அங்கிருந்து வரும்போதும் நிறைய காட்டு எருமைகளை பார்த்தோம். அவலாஞ்சியை நெருங்கும்போது கோவையில் HOSPITAL-லில் இருந்த ரமேஷின் உறவினர் இறந்துவிட்டார் என்ற சோக செய்தி கிடைத்தது. முதலில் ரமேஷும் உடனே கிளம்பும் முடிவில் இருந்தார். மறுநாள் காலைதான் HOSPITAL-லில் இருந்து உடலை POST-MARTEM செய்யப்பட்டு கொடுப்பார்கள் என்பதால் மறுநாள் விடியற்காலையிலேயே எல்லோரும் கிளம்புவது என்று முடிவு செய்யப்பட்டது.

காரமடை ரேஞ்சை சேர்ந்த பில்லூர் அணைக்கட்டு அருகிலுள்ள பரளிகாட்டில் தமிழ்நாடு வனத்துறையினரால் நடத்தப்படும் ஒருநாள் PICNIC-க்கில் கலந்துகொள்ள சென்னையிலிருந்தே முன்பதிவு செய்திருந்ததால் நாங்கள் எமரால்டு குந்தா மற்றும் மஞ்சூர் வழியாக பரளிகாடு செல்ல முடிவு செய்தோம். விடியற்காலை நான்கு மணிக்கே கிளம்பி மஞ்சூர் வந்தடைந்தோம். மஞ்சூரில் ரமேஷை கோயம்புத்தூர் பஸ்ஸில் ஏற்றிவிட்டு பயணத்தை தொடர்ந்தோம். மஞ்சூரில் இருந்து பரளிகாடு செல்லும் வழி மிகவும் குறுகிய வளைவுகளோடு எழிலாக இருந்தது. GEDDAI POWER HOUSE வழியாக பரளிகாடு படகுத்துறை சென்றடைந்தோம். பில்லூர் அணைக்கட்டின் அழகிய கரையோரம் அமைந்துள்ள மரங்களடர்ந்த இடத்திலிருந்து புறப்படும் படகுகள் அணைக்கட்டின் அருகே 1 கிலோமீட்டர் வரை சென்று திரும்புகின்றன. இருளர் இனத்தை சேர்ந்த ஆண்கள் படகுகளை இயக்குகின்றனர். இருளர் இனத்தை சேர்ந்த பெண்கள் உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். படகு மற்றும் உணவுக்கு ஒருவருக்கு ரூபாய் 300 இதை நடத்தும் வனத்துறைக்கு கொடுக்கவேண்டும். வனத்துறை இதை இந்த பகுதி மக்களின் நல்வாழ்விற்கு செலவிடுகிறது.


படகு பயணம் முடிந்து கரைக்கு திரும்பியதும் உணவு பரிமாறப்படுகிறது. சிறந்த இயற்கை உணவு. கேழ்வரகு மற்றும் கம்பு கூழ் பரிமாறப்படுகிறது. மலை கிராமங்களில் கிடைக்கும் காய்கறிகள் உணவுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் பின்பு இங்கிரிந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திலுள்ள பவானி நதியின் கிளை நதியில் ஆனந்த குளியல் போட்டோம். பின்பு அங்கிருந்து கிளம்பி காரமடை வழியாக கோயம்புத்தூர் இரயில் நிலையம் சென்றடைந்தோம். எங்களுடன் எல்&டி-யில் பணியாற்றி தற்போது கோயம்புத்தூர் HANSEN DRIVES COMPANY-ல் COMPENSATION & BENEFITS DEPARTMENT-ல் Sr. Manager-ஆக பணியாற்றும் திரு.மோகன் அவர்களை இரயில்வே ஸ்டேஷன் பார்க்கிங்கில் சந்தித்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம் பின்பு இரவு உணவை முடித்துவிட்டு நீலகிரி எக்ஸ்பிரஸ் வண்டியில் சென்னை திரும்பினோம்.

இவ்வாறாக ஒரு இனிய பயணம் முடிவுக்கு வந்தது.