18-10-2010
காலை 7மணி மேகமலையிலிருந்து கிளம்புதல் வழியில் சுருளிஅருவி, வைகை அணைக்கட்டு,உசிலம்பட்டி மற்றும் பரையூர் வழியாக குற்றாலம் சென்று இரவு குற்றாலத்தில் தங்குதல்.
காலை 7.00 மணிக்கு மேகமலையிலிருந்து கிளம்பி சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் வழியாக சுருளி அருவியைச் சென்றடைந்தோம்.
காலை உணவை ஆளுக்கிரண்டு இளநீரோடு முடித்துக்கொண்டோம். சுருளிப்பட்டியிலிருந்து சுருளிஅருவி வரை சாலையின் இருமருங்கும் திராட்சை தோட்டங்கள் உள்ளன. ஒரு தோட்டத்தில் சுமார் 6 கிலோதிராட்சையை வாங்கி காரில் வைத்துக்கொண்டோம்.மூன்று நாட்கள் வரை வேண்டும்போது சாப்பிடுவதற்க்கு போதுமானதாக இருந்தது.சுருளி அருவியில் நீர்வரத்து குளிப்பதற்க்கு ஏற்ற வேகத்தில் இருந்தது.குளியல் முடித்து தேனிக்குபயணமானோம்.தேனியில் மதியஉணவை மாருதி உணவகத்தில் முடித்துவிட்டு நண்பர் பரமசிவம் எங்களிடம் பிரியாவிடை பெற்றார். தேனியிலிருந்து மதுரை செல்லும் வழியில் சுமார் 15 கிலோமீட்டரில் வைகை அணைக்கட்டு உள்ளது. சுமார் 2.30மணிக்கு வைகை அணைக்கட்டை அடைந்தோம். அணையின் மதகுகள் திறந்து தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடியது. பூஞ்செடிகள், கொடிகள் மற்றும் மரங்களடர்ந்த பூங்காவினில் நடந்து செல்வது மனதுக்கு உவகைத்தந்தது.
வைகை அணைக்கட்டிலிருந்து ஆண்டிப்பட்டி,உசிலம்பட்டி, பரையூர் சென்றோம். பரையூர் பஸ் ஸ்டாண்ட்டிற்க்கு முன்னால் வலதுபுரம் திரும்பினால் சுப்பலாபுரம் வழியாக NH208-யைஅடையலாம். NH208-யில் வலதுபுரம் திரும்பி ஸ்ரீவில்லிபுத்தூரை சுமார் மாலை 6.30 மணிக்கு அடைந்தோம். வழக்கம்போல ஸ்ரீவில்லிபுத்தூரை கடக்கும்பொழுதெல்லாம் உணவருந்தும் ஆண்டாள் கோயில் பஸ்ஸ்டாப்புக்கு எதிரில் NH208 சாலையிலுள்ள கதிரவன் ஹோட்டலில் இரவு உணவை முடித்துக்கொண்டோம்.
ஓட்டல் கதிரவன்
நெடுஞ்சாலைகளில் ஹோட்டல்கள் நன்றாகஅமைவதில்லை என்பது பொது விதி.ஆனால் கதிரவன் இதற்க்கு விதிவிலக்கு. மிகச்சிறிய இடத்தையும் சிறப்பாக நிர்வகிக்கிறார்கள்.பதார்த்தங்களின் சுவையை சொல்வதற்க்கு வார்த்தைகளேயில்லை.பரிமாறுபவர்கள் அன்போடு எல்லாவற்றையும் பரிமாறுகிறார்கள்.ஸ்ரீவில்லிபுத்தூரை கடந்து செல்பவர்கள் தயவு செய்து இங்கு உணவருந்தி செல்லவும். உணவருந்திய பின் இராஜபாளையம் வழியாக குற்றாலத்தை அடையும் பொழுது இரவு மணி 9.15. இணையதளம் மூலமாக தமிழ்நாடுசுற்றுலா விடுதியில் இரண்டு அறைகள் முன்பதிவு செய்திருந்ததால் உடனே அறைகளுக்குச் சென்று களைப்பைபோக்க உறங்கச்சென்று விட்டோம்.
0 comments:
Post a Comment